விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலை தனியார் பள்ளி சோதனை சாவடி அருகே இராஜபாளையம் காவல்துணைக் கண்காணிப்பாளர் தனிப்படை சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காய்கறி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் புகையிலை, குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் சோதனைச் சாவடி அருகே உள்ள டீக்கடைக்கு பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் விற்பனைக்கு வந்தது தெரிய வந்தது. போலீஸார் இராஜபாளையம் தர்மாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரராஜா மகன் பார்த்திபன்(55) மற்றும் கிருஷ்ணாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சிரஞ்சீவி(30) ஆகிய இருவரையும் கைது செய்து 11 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.





