• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மியான்மரில் 11 உயிருடன் எரித்து கொலை…ஐக்கிய நாடுகள் கண்டனம்…

Byகாயத்ரி

Dec 10, 2021

மியான்மரில் கிராம மக்கள் 11 பேர் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் வடமேற்கில் உள்ள சாகயிங் பகுதியில் டோன் டா என்ற கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் 11 பேரின் கை கால்களை கட்டி உயிருடன் எரித்து கொன்றுள்ளனர்.

இது குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி வழியே என்ற ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு பழி தீர்க்கும் வகையில் ராணுவம் 11 பேரை உயிருடன் எரித்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சம்பவத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படுகொலைக்கு காரணமாக ராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.சபை வலியுறுத்தி உள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.செய்தித் தொடர்பாளர், மியான்மரில் 11 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆழ்ந்த கவலையை அளித்துள்ளது.

அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ராணுவத்தால் சுடப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செயலை கண்டிக்கிறோம். மியான்மர் ராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை உள்ளது, என்றார்.