• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

10ம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 29 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை (India Post)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 29

பணி : Staff Car Driver

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று light & heavy Motors vehicles license வைத்திருக்க வேண்டும்.

மேலும், இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 மாதம்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.03.2022 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.indiapost.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.