கிராமப்புறங்களில் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் 100 நாள் வேலை திட்டம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். அமைச்சர் கூறியதாவது, “தமிழகத்தைப் பொருத்தவரை 2018 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளில் 58 லட்சத்து 69 ஆயிரமாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை தற்போது கொரோனா இரண்டாவது 70 லட்சத்தை கடந்து இருக்கிறது இவர்களுக்கு தினசரி ஊதியமாக 273 வழங்கிக் கொண்டிருக்கிறோம் ஆனாலும் தற்போதைய கொரோனா முடியாத காரணத்தால் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு அதிகப்படியான தொழிலாளர்கள் வந்து சேர்கின்றனர். இப்படி வேலை செய்யும் தொழிலாளர்கள் தற்போதைய சம்பளமான 273-ஐ 300 ஆக உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய பரிசீலனை செய்து தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என உறுதியளித்தார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பெரியகருப்பன்.