• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பத்து வயது சிறுமி இரண்டு மணிநேரம் கண் இமைக்காமல் சாதனை..!

ByKalamegam Viswanathan

Oct 13, 2023

உலக பார்வை தினத்தை முன்னிட்டு 10 வயது சிறுமி இரண்டு மணி நேரம் கண் இமைக்காமல் சாதனை படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் இவரது மகள் A.S அனிஷ்கா உலக சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த மூன்று மாதங்களாக ஐயப்பன் என்ற பயிற்சியாளர் உதவியுடன் கண் இமைக்காமல் ஒரு மணி நேரம் 30 வினாடி சாதனைக்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு,

அதைத் தொடர்ந்து நேற்று இரவு இராஜபாளையம் பெரிய சாவடியில் வைத்து ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அவர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் அறிவுறுத்தலின்படி இரண்டு மணி நேரம் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் கண்காணிப்பில் விழிகளை இமைக்காமல் இருந்து சாதனை படைத்தார்.

ஒரு மணி நேரம் 30 வினாடிகள் சாதனை புரிய வேண்டும் என நினைத்த சிறுமி இரண்டு மணி நேரம் விழிகளை இமைக்காமல் விழிகளில் கண்ணீர் வந்தாலும் விழிகளை இமைக்காமல் உலக பார்வை தினத்தில் தன் சாதனையை படைத்தார் சாதனை படைத்த சிறுமி அனிஷ்காவை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சக நண்பர்களும் பாராட்டினர்.