விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரவாத வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இராஜபாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று பறக்கும் படை. பிரிவு இரண்டு தனியார் கல்லூரி கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு தலைமையிலான சார் ஆய்வாளர் தனலிங்கம் தலைமை காவலர்கள் சரவணன். அமுதா உள்ளிட்ட குழுவினர் சோதனை செய்த பொழுது இராஜபாளையம் வள்ளலார் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மோகன் என்பவர் கட்டிட பணி ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.

அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் இருந்த 1 லட்சத்து 46 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் இராஜபாளையம் வட்டாச்சிய அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் ராமசுப்ரமணியனிடம் ஒப்படைத்தனர்





