• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் ரிசர்வ் வங்கி…காரணம் இது தான்!…

By

Aug 11, 2021

வரும் அக்டோபர் 1 முதல் வங்கி ஏடிஎம்களில்ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படவில்லை என்றால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் திட்டத்தை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகள் தங்களது ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படாமல் இருக்கும் சூழலை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக ஏடிஎம்களில் பணம் நிரப்பபடாததற்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படாமல் இருந்தால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதமாக விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ஏடிஎம்களில் பணம் இல்லாததால் ஏடிஎம் மையங்கள் செயல்படாமல் இருக்கும் நேர அளவை கணக்கில் எடுத்துக் கொள்ளும் அடிப்படையிலும் பணம் இல்லாததால் மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்கும் பொருட்டும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.