• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது

Byvignesh.P

Jul 9, 2022

மின்சாரவாரியத்தில் தனியாரை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்க மின்வாரியதொழிலாளர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி என் ஆர் டி சாலை மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கரந்தமலை தலைமை வகித்தார்.அமைப்புச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள் பொறியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வருங்கால பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 110 அரசாணையான அந்த முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், அந்த மின்வாரிய மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் மின்விநியோகம் மற்றும் பராமரிப்பில் தனியாரை அனுமதிக்கும் மத்திய அரசின் நிபந்தனைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை தடுக்கும் தொழிலாளர் விரோத சக்திகளின் போக்கை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.