• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை…

Byadmin

Jul 21, 2021

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான மாகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிபாளையம், சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி,  அலங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. பெண்கள் குழந்தைகள், சிறியவர், பெரியவர் என அனைத்து இஸ்லாமியர்களும் பங்கேற்றனர். அதன் பின்னர் இறைவனுக்கு ஆடுகளை குர்பானி கொடுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர். தொழுகையில் கொரனா தடுப்புமுறைகள் பின்பற்றப்பட்டன. ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.