• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்…

Byadmin

Aug 5, 2021

அமரர் கல்கி எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ தற்போது திரைப்படமாக உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே..

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தைத் முதல் பிரதி அடிப்படையில் தற்போது இயக்கி தயாரித்து வருகிறார்.

கார்த்தி, விக்ரம், பிரபு, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், திரிஷா, ஜெயம் ரவி, பார்த்திபன், ஜெயராம், அதிதி ராவ் ஹைதாரி, ஐஸ்வர்யா லஷ்மி, சோபியா துலிசலா, மோகன்ராம், நிழல்கள் ரவி என்று பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

இதில் யார், யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள உலகம் முழுமையும் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாய் இருந்து வந்தனர் இந்தச் சூழலில் இந்தக் கதாபாத்திர நடிகர், நடிகைகள் யார், யார் என்பதை போஸ்டர் வடிவத்தில் படக் குழு வெளியிட்டுள்ளது.

சுந்தர சோழனாக.. அதாவது ராஜராஜசோழனின் தந்தையாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். ராஜராஜசோழன் என்னும் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார். வந்தியத் தேவனாக கார்த்திநடிக்கிறார். வந்தியத் தேவனின் மனைவி குந்தவையாக த்ரிஷா நடிக்கிறார். ராஜராஜ சோழனின் முதல் மனைவியான வானதியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

சுந்தர சோழனின் முதன்மைத் தளபதியான பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், இவரது தம்பி சின்னப் பழுவேட்டரையராக பார்த்திபனும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையரின் காதலியான
நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். ராஜராஜ சோழனின் அண்ணனான ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார். ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் நடிக்கிறாராம். இதுவரையில் தான் உறுதியான தகவல்கள் தெரிந்துள்ளது. மேலும் அநிருத்தப் பிரம்மராயராக மோகன் ராம் நடிக்கிறார்
என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.