• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பைக்குகள் திருடி விற்ற 3 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்.

Byadmin

Jul 15, 2021

தென்மாவட்டங்களில் பைக்குகள் திருடி விற்ற 3 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர். 18 பைக்குகள் பறிமுதல்.
தென்மாவட்டங்களில் பைக்குகள் திருடி விற்ற 3 பேரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆலங்குளம் போலீசார் கடந்த ஜூலை 8ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த கோட்டாரங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் வயது 38 என்பரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் பைக்கை திருடி வந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் ராஜ் குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆலங்குளம் சுரண்டை பாவூர்சத்திரம் குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர் தட்டார்மடம் உள்ளிட்ட பல பகுதியில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக பைக்குகளை திருடி வெவ்வேறு இடங்களில் விற்றது தெரியவந்தது. ஆலங்குளம் போலீசார் ராஜ்குமார் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகள் சிவலிங்கம் வயது 20, சிதம்பரம் வயது 18 ஆகியோரை கைது செய்தனர். 18 இருசக்கர வாகனங்களை பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்து ஜூலை 12 ம் தேதி ஆலங்குளம் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பைக் திருட்டு வழக்கில் ராஜ்குமார் சிவலிங்கம் சிதம்பரம் ஆகிய 3 பேரை கைது செய்து ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
பைக் திருட்டு வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசாருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்னி வளவன், ஆலங்குளம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. சந்திரசேகரன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.