• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு!…

Byadmin

Jul 15, 2021

வீட்டு வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு.

கோவையில் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இரவு மற்றும் பகல் நேரங்களில் இதற்கென தனிப்படை அமைத்து தீவிர ரோந்து பணியில் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வாழ்வாதாரம் இழந்த ஒரு சில நபர்கள் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெண்கள் அணிந்து செல்லக்கூடிய நகைகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது போல கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மனைவி விஜயா வயது 55, இவர் நேற்று மாலை வீட்டின் முன்புறம் உள்ள அவருடைய செடிகளில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என்பது போல பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதற்கு விஜயா மிகுந்த ஆர்வத்துடன் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென விஜயா கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் புறப்பட்டனர். அப்போது விஜயா சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று செயின் பறிப்பு சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.