• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பனீர் வெஜிடபிள் பிரியாணி:

Byவிஷா

Sep 11, 2023

பாசுமதி அரிசி – 1 கப், கெட்டித் தயிர் – 1 கப்,
நெய் – 6 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1ஃ2 டீ ஸ்பூன், பிரிஞ்சி இலை – 4, பனீர் – 150 கிராம், உப்பு – தேவையான அளவு, வெங்காயம் – 2, இஞ்சி விழுது – 1ஃ2 ஸ்பூன், பூண்டு – 4 பற்கள், தக்காளி – 2, பீன்ஸ் – 8, கேரட் – 1, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, காலிபிளவர் – 8 சிறிய பூக்கள்

வறுத்து அரைக்க:

கிராம்பு – 2
பட்டை – 1 சிறிய துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காயத் துருவல் – 6 டேபிள் ஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
பச்சை மிளகாய் – 2

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை எடுத்து, தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்ததும், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பின்னர் அடுப்பில்  கடாயை வைத்து, அதில் சிறிது நெய் கிராம்பு, பட்டை, சோம்பு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், பச்சை மிளகாய்யை போட்டு நன்கு வறுத்ததும், இறக்கியபின் ஆறவைத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் தேங்காய் துருவல், வறுத்து ஆற வைத்த கலவையை போட்டு மையாக அரைத்து கொள்ளவும். மேலும் பன்னீர், தக்காளி, பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, புதினா, காலிபிளவர், வெங்காயத்தை தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து அதில் சிறிது நெய் வெட்டிய வெங்காயத் போட்டு நன்கு வதக்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வதக்கவும். மேலும் அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிய பின்னர், அதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வதக்கிய கலவையிலிருந்து நெய் தனியாக பிரிந்ததும், அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, , பீன்ஸ், கேரட், காலிபிளவர், பன்னீரை சேர்த்ததும், மசாலா கலவையானது எல்லா நறுக்கிய காய்கறிகளுடன் படும்படி நன்கு வதக்கவும். பின்பு வதக்கிய கலவையுடன் தண்ணீரில் ஊற வைத்த பாசுமதி அரிசி அப்படியே சேர்த்ததும், அதில் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்ததும், குக்கரை மூடி வைத்து 2 விசில் வந்ததும், இறக்கி நன்கு கிளறியபின் பரிமாறினால் அருமையான ருசியில் பன்னீர் வெஜிடபிள் பிரியாணி ரெடி.