• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில்…நடிகராக இணையும் இயக்குனர் செல்வராகவன்…!

Byகுமார்

Aug 8, 2021

தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை கதாநாயகியாகவும் யோகிபாபுவை கதையின் நாயகனாகவும் இணைத்து வித்தியாசமாக யோசித்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். அந்தவகையில் தற்போது விஜய் படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறார்.


தற்போது லேட்டஸ்ட்டாக இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சாணிக்காயிதம் என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதன் மூலம் நடிகராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் செல்வராகவன். அந்தவிதமாக பீஸ்ட் படம் மூலம் ஒரு நடிகராகவும் செல்வராகவன் மிகப்பெரிய அளவில் பிரபலமாவார் என எதிர்பார்க்கலாம். அநேகமாக படத்தில் அவர் வில்லனாக நடிக்கலாம் என கூறப்படுகிறது.