• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தவெகவில் அதிகாரப்பூர்வமாக நுழையும் நடிகை த்ரிஷா? மதுரையில் அரங்கேறிய அதிரடி.. பின்னணி!

ByKalamegam Viswanathan

Aug 9, 2026

தவெகவில் நடிகை த்ரிஷா விரைவில் அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என்ற பேச்சுகள் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடிகை த்ரிஷா இருந்து வரும் சூழலில், லோக்சபா தேர்தலுக்கு முன் த்ரிஷா தவெகவில் இணையலாம் என்று பார்க்கப்படுகிறது.

முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த மனு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்கு சங்கீதா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனென்றால் விஜய்யின் விவாகரத்து வழக்கு தவெகவினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதுவும் சரியாகிவிட்டதாக பேசி வருகின்றனர்.

இருப்பினும் தவெகவினருக்கு இன்னொரு கவலையும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை த்ரிஷா முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் இருந்து வருகிறார். முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தொடங்கி அவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் வரை த்ரிஷாவின் செயல்பாடுகள் தவெகவினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே நடிகை த்ரிஷா நேரடி அரசியலில் களமிறங்கக் கூடும் என்று தவெகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே மதுரையில் த்ரிஷா நற்பணி மன்றம் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டது அவரின் அரசியல் வருகைக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே பார்க்கப்படுகிறது. அந்த போஸ்டரிலும் கூட அக்கா த்ரிஷா என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த போஸ்டரை அடித்திருப்பதும் கூட தவெக தொண்டர்கள் தான். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா பாணியில் த்ரிஷாவும் சில கோயில்களுக்கு யானை கொடுத்து வருகிறார். ஏற்கனவே அரசியலில் ஆர்வம் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். தற்போது தமிழக அரசியலில் த்ரிஷாவின் பெயரும் அதிகமாகவே உச்சரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக த்ரிஷா தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் முதல்வர் விஜய்யும் தன்னுடன் இருந்த பல்வேறு நபர்களுக்கும் அரசியலில் முக்கியத்துவம் கொடுத்து பொறுப்பு அளித்து வருகிறார். இதனால் த்ரிஷாவுக்கும் நிச்சயமாக பொறுப்பு அளிப்பார் என்பதே தவெகவினரின் கணக்காக இருக்கிறது.