• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தகராறில் ஊழியரை அடித்து கொலை..,

ByE.Sathyamurthy

Jun 18, 2025

ராமநாதபுரம், புதுக்குளத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம்,45. இவர் ஆதம்பாக்கம், மூன்றாவது பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பம்ப் மேனாக வேலை பார்த்த வந்தார்.

இவர் நேற்று பெட்ரோல் பங்க் பகுதியில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் தலைமையில் அடிப்பட்டு இறந்ததால் குடிபோதையில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதையடுத்து, சாதாரண மரணமாக போலீசார் வழக்கு பதிந்து உடலை உறவினரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் முத்துராமலிங்கத்திற்கும், அதே பங்கில் காசாளராக வேலை பார்த்த கவுதமனுக்கும் இடையே வீணா என்ற பெண்ணுக்கும் ஏற்பட்ட தொடர்பு தொடர்பாக தகராறு இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர்களுக்குள் நேற்று ஏற்பட்ட சண்டையில் முத்துராமலிங்கத்தை பழைய பெட்ரோல் பம்பால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சாதாரண வழக்கை கொலை வழக்காக மாற்றி கவுதமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.