• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை தோட்டத்தில் மது அருந்திய கும்பலை தட்டி கேட்ட மருத்துவ மாணவர் குத்தி கொலை….

Byadmin

Jul 26, 2021

சிவகங்கை அண்ணாமலை நகரில் இருதயராஜ் என்பவரது தோட்டத்தில் மது அருந்தி கொண்டு இருந்த 10 பேர் கொண்ட கும்பலை தோட்டகாரர்கள் கண்டித்துள்ளனர் அண்ணாமலை நகரில் வசிக்கும் இருதயராஜ் இவரது மகன்கள் ஜோசப்சேவியர் (25) கிரிஸ்டோபர் (22) வசித்து வருகிறார். அப்போது அவரது தோட்டத்தில் ஒரு கும்பல் மது அருந்தி வருவதாக ஆடு மேய்பவர்கள் இருதயராஜ்க்கு தகவல் தந்தனர். உடனே இருதயராஜ் மகன் இருவரையும் அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று கும்பலிடம் தட்டி கேட்டனர் அப்போது எற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் கிரிஸ்டோபர் (22) சம்பவ இடத்திலே பலியானார் . அண்ணன் ஜோசப்சேவியர் கத்திகுத்து விழுந்துள்ளது தந்தை இருதயராஜ்க்கும் முகத்தில் காயம் எற்பட்டு தப்பினர் சம்பவம் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்..’சிவகங்கை நகர் காவல் துறையினர் மற்றும் மாவட்ட எஸ்பி செந்தில்குமார் தலைமையில் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய கும்பலை தனிபடை அமைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குடிபோதையில் நடந்ததா? கூலிப்படையா? அல்லது இடதகறாறு முன் பகையா? என பல்வேறு கோணங்களில் போலிசார் விசாரித்து வருகின்றனர். இருதயராஜ்யின் இருமகன்களும் .பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவபடிப்பு இரண்டாம் ஆண்டு முதலாம் ஆண்டு படித்து வருவதும் இருவரும் கொரானா தொற்று அச்சத்தில் ஊர் திரும்பியவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது..