• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களில் முக்கால்வாசியை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் இரண்டு நடிகர்களென்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். இருவரும் நண்பர்களாக இருந்தாலும் விஜய், அஜித் ரசிகர்களுக்குள் எப்போதுமே ஒரு போட்டி இருக்கும்.

Byadmin

Aug 5, 2021

யார் படத்துக்கு மிகப்பெரிய ஓபனிங், கலெக்‌ஷன் என தங்களுடைய பலத்தை நிரூபிக்க மோதிக் கொண்டே இருப்பார்கள். குறிப்பாக, ட்விட்டரில் பெரிய யுத்தத்தையே தொடுப்பார்கள். நடிகர்களான விஜய்யும், அஜித்தும் இதை விரும்புவதில்லை என சொல்லப்பட்டாலும், ரசிகர்களுக்கு இடையிலான சண்டையை தடுக்கவும் எந்த முயற்சியும் எடுத்ததில்லை என்பதே நிதர்சனம்.

ட்விட்டரில் ஹேஷ்டேக் யுத்தமொன்று அடிக்கடி நடக்கும். யார் படம் பெஸ்ட், எந்த ஹீரோவின் டீஸர் அதிக லைக்ஸ் பெற்றது, எந்த ஃபர்ஸ்ட் லுக் அதிகமாக டிரெண்டானதென இரண்டு க்ரூப்பும் அடித்துக் கொள்ளும். அப்படி, புதியதாக இரண்டு ஹேஷ்டேக்குகள் பூதமாக கிளம்பியிருக்கிறது.

சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனத்துடன் காத்திருக்கிறார்கள். திடீர் சர்ப்ரைஸாக, யுவன் ஷங்கர் ராஜா இசைக் கோர்ப்பில் படத்தின் முதல் சிங்கிளான ‘நாங்க வேற மாதிரி’ பாடல் வீடியோவானது யூடியூப்பில் வெளியானது.

வலிமை பாடல் வெளியான 24 மணிநேரத்தில் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாட்டு பெற்ற சாதனையை முறியடிக்க தவறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால், விஜய் ரசிகர்கள் #UnbeatableKuttiStoryRecords எனும் ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்தனர்.

அதாவது, விஜய்யின் மாஸ்டர் படத்தின் சிங்கிள் வெளியாகி 24 மணிநேரத்தில் 9 மில்லியன் வியூவ்ஸைத் தாண்டியது. அதோடு, 1.04 மில்லியன் லைக்குகளைப்பெற்றது. இந்தச் சாதனையை, சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை சிங்கிளானது 25 மணிநேரத்தில் 9 மில்லியன் வியூவ்ஸையும், 1.01 மில்லியன் லைக்குகளையும் பெற்றது. இந்த ஒரு மணிநேர வித்தியாசத்தைக் கொண்டு, விஜய் – 1, அஜித் – 0 என கிளம்பிவிட்டார்கள்.

அப்படி, விஜய் ரசிகர்களின் சர்காஸ்டிக்கான ஹேஷ்டேக்கினால் கடுப்பான அஜித் ரசிகர்களும் சும்மா இருக்கவில்லை. #Fastest10MLikesForVeraMaari எனும் ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்தனர்.

இந்தப் போர் இன்னும் முடியவில்லை. வலிமை டீஸர், அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகும் போதும் ஒப்பீடுகள் தொடரும்.