• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இன்று உலக சாக்லேட் தினம்

Byadmin

Jul 7, 2021

இன்று உலக சாக்லேட் தினம்… உதகை என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஹோம்மேட் சாக்லேட் தான்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை 7-ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சாக்லேட் பற்றிய சுவையான அனுபவங்களை உணர்த்துவதற்காகவே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்புகள் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் இனிப்புகள் தான் அவர்களது மகிழ்ச்சியாக காணப்படும். வீட்டில் சமைக்க கூடிய உணவுகளை சாப்பிடுகிறார்களோ, இல்லையோ கடைகளில் விற்கின்ற பல வகையான இனிப்பு வகைகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது உண்டு.

அதேபோல் முதியவர்கள் ஆனாலும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் இனிப்பு பண்டங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவது உண்டு. ஆனால் அப்படிப்பட்டவர்கள் கூட இனிப்பை கண்டால் சில சமயங்களில் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி உட்கொள்கின்றனர்.

இவ்வாறு இனிப்புகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையுமே அடிமையாகி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சாக்லேட்டுகள் நமது வாழ்க்கையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நாளில் மக்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு சாக்லெட் வாங்கி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சாக்லேட் சாப்பிடுவது பல்வேறு உடல் நல சத்துக்களுக்கு நல்லது என பல ஆய்கள் சொல்லுகின்றனர். முதன் முதலாக இந்த சாக்லேட் திடம் 2009ம் ஆண்டு தான் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தான் ஐரோப்பாவில் முதன்முதலாக 1550ம் ஆண்டுதான் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் தான் இந்த நாளை சாக்லேட் தினமாக கொண்டாடுகிறோம்.