குளச்சலில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வினாயகர் ஆலயம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் ஆலயம் சார்ந்த சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி செய்யும் அறநிலையத்துறையை கண்டித்து இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் செட்டியார் சமுதாய மக்களின் பூர்வீக சொத்தான 600 வருடங்கள் பழமையான தேசு வினாயகர் ஆலயம் மற்றும் ஆலயம் சார்ந்த பல கோடி ரூபாய் சொத்துக்களை ஆக்ரமிப்பு செய்ய முயலும் அறநிலையத்துறையை கண்டித்து குளச்சல் பேருந்து நிலையம் முன்பு அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழகம் முழுவதும் பல லட்சம் ரூபாய் கோவில் சொத்துக்களை பராமரிப்பு செய்யாமல் சீரழித்து வரும் அறநிலையத்துறை தேசுவினாயகர் போன்ற சமுதாய வகை கிராம கோவில்களை சமுதாய மக்களுக்கு விட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..
தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இந்து ஆலய நிலங்களை மீட்டு வரும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவரும் தேசிய துணை தலைவருமான த.பாலசுப்பிரமணியன் அவர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
போராட்டத்தில் திரளான இந்து மகா சபா கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)