ஸ்டேன் சுவாமி மரணம்- கண்டித்து நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி ஜூலை 8-
ஜார்க்கண்ட் பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சாமி காவலில் இருக்கும்போது மருத்துவமனையில் மரணமடைந்ததை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் சுடலைராஜ் தலைமை தாங்கினார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் ,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சங்கரபாண்டியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம் ராஜகுரு, வழக்கறிஞர் பிரிட்டோ, மக்கள் அதிகாரம் அன்பு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீ.பழனி நிறை உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் வரகுணன்,பெருமாள் சிபிஎம் தோழர்கள் சரவணபெருமாள், குழந்தைவேலு ,நாராயணன்,பேரின்பராஜ் ,ராஜேஷ் ,கர்ணா,பாலசுப்பிரமணியம், ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.