• Wed. Mar 19th, 2025

விருதுநகரில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்!..

By

Aug 15, 2021

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமாதான புறாக்களையும் பறக்கவிட்டார்.

பின்னர் காவல் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 21 துறைகளில் பணிபுரியும் 463 பேருக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. அரசு பிறப்பித்திருந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.