இந்திய திருநாட்டின் 75வது சுதந்திரதினம் நாளை மறுதினம் 15ம்தேதி கொண்டாடப்படவுள்ளது, கொரோனா பாதிப்பால் சுதந்திரதின கலைநிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்படாலும் வழக்கம்போல நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனிடையே சுதந்திரதினத்தையொட்டி வன்முறை அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையினையடுத்து, கொரேனா காலத்தில் குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்பட்டாலும் விமானநிலையங்கள் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விமானநிலையத்திற்கு 3அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்புபடை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு கருதியும், கொரோனா விதிமுறைகளின்படி பார்வையாளர் மாடம் ஏற்கனவே மூடப்பட்டிருந்தாலும், விமானநிலைய பயணிகள் வருகை பகுதிகளில் பொதுமக்கள் கூட அனும மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானநிலையத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் முழுவதும் சோதனைக்குட்படுத்தப்பட்டு உள்நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் சரக்கு போக்குவரத்து பகுதிகளிலும் செல்லும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.