

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்ட யோகா ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள். தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான யோகா கல்வி பயின்றவர்களே அரசுப் பள்ளிகளிலும் அரசுத் துறைகளிலும் யோகா பயிற்றுனராகவும் யோகா ஆசிரியராகவும் சென்ற ஆட்சியில் நியமனம் செய்யப்படும் என்று சொல்லி எங்களை ஏமாற்றி விட்டார்கள். அது கானல் நீராக போய் விட்டது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் யோகா ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை வைத்தோம்.
கழக ஆட்சி வந்தவுடன் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். அதனடிப்படையில் கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் யோகா கல்வி பயின்றவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ அல்லது தேர்வு வைத்து யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் . பிற அரசு துறைகளிலும் யோகா பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை முன் வைக்கிறோம் . எனவே கூடிய விரைவில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டி மறுபடியும் முதல்வரை சந்திக்க நாள் கேட்டுள்ளோம்.
பிற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் கூடிய விரைவில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம் . இந்த சந்திப்பில் தமிழ்நாடு பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வே . காசிநாததுரை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஷாஜகான் ராமலட்சுமி சுகன்யா அமுதா சத்யபாமா மாரிமுத்து சர்மா சந்திர வள்ளி செல்வகுமார் ராணி கலந்துகொண்டனர்

