பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை அமுலாக்குவதும் தொழிலாளர் நலச் சட்டங்களை காலாவதியாக்குவதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பொதுத்துறைகளை 100 சதவீதம் தனியார் மயமாக்கும் திவீர நடவடி;ககையில் ஈடுபட்ட மோடி அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மதுரையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப் சிஐடியு ஏஐடியுசி ஐஎன்டியுசி எம்.எல்.எப் எச்.எம்.எஸ் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.