சாத்தான்குளம் அருகே முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 8பேர் மீது போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கடற்கரையாண்டி மகன் பேச்சிமுத்து (41) இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் சேர்மத்துரை (43) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சேர்மத்துரை உறவினர் ரமேஷ் மகன் வசந்தகுமார் பைக் ஓட்டி வந்து பேச்சிமுத்து மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
இதுகுறித்து பேச்சிமுத்து, சேர்மத்துரை ஆகியோர் தனித்தனியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் வசந்தகுமார், அவரது சகோதரர்கள் முத்துக்குமார், சூரியகுமார், மற்றும் சேர்மத்துரை ஆகிய 4பேர் மீதும், சேர்மத்துரை அளித்த புகாரின் பேரில் பேச்சிமுத்து, அவரது மனைவி விஜயலட்சுமி, தாயார் மாரியம்மாள், மாயாண்டி மகன் பிரேம்குமார் ஆகிய 4பேர் மீது உதவி ஆய்வாளர் ஜான்சன் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.