கோவில்பட்டியில் முன்விரோதத்தில் இளைஞரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் கல்லூரணி ஜீவா நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கருப்பசாமி (24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிமுத்து (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கருப்பசாமி வானரமுட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இசக்கிமுத்து கருப்பசாமியை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் காயம் அடைந்த கருப்பசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி கொலை முயற்சி வழக்குப் பதிந்து இசக்கிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.