

எஸ்.பி- வேலுமணி மீது.விசாரணைக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். டெண்டர் முறைகேடு விவகாரம். கோவை. ஜூலை. 20- முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் விசாரணைக்கு பிறகு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்து இருப்பதாக அப்போதைய உள்ளாட்சித் துறை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி மட்டும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணி எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை முடிவடைந்து உள்ளது. விசாரணை அறிக்கையில் முறைகேடு ஈடுபட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை இதை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டும் என அப்போதைய அதிமுக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கவில்லை. இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வக்கீல் சுரேஷ் இந்த வழக்கில் நிறைய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால் நேரடி விசாரணை மேற்கொள்ளவேண்டும். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் எனவே இப்ப சூழல் மாறிவிட்டது. வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரினார். எஸ். பி. வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஏற்கனவே சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்த முகாந்திரமும் இல்லை என தெரிய வந்துள்ளது. விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார். அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள பெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கை முடித்து வைத்து அரசின் முடிவு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. விசாரணைக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.

