• Thu. Feb 13th, 2025

மா.சு.விடம் மனு கொடுத்த திமுக முன்னாள் நிர்வாகி!..

By

Aug 12, 2021

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சமீபத்தில் திமுக அரசு கொண்டு வந்த மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டமும் எப்படி செயல்படுகிறது என்பதை பார்வையிட்டு வருகிறார். இன்று சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி சந்தியூர் என்ற கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதனை தொடங்கிவைத்தார். மேலும் மல்லூர், சந்தியூர், ஆட்டையாம்பட்டி பகுதிகளில் முறையான மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா? என வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது ஏற்காடு தொகுதிக்குட்பட்ட வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பிரதே பரிசோதனை கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் படி, திமுக மாவட்ட பொருளாரும் முன்னாள் கவுன்சிலரான கமல் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக நடவடிகை எடுக்கப்படும் என உத்தரவு கொடுத்தார்.