நெல்லை மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாஞ்சோலைப் போராளிகள் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல் நிகழ்ச்சி.
கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 இல் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய ஊர்வலத்தில் காவல்துறை நடத்திய தடியடியில் 17 தமிழர்கள் உயிரிழந்தனர் அதன் 22 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆரோக்கியநாதபுரத்தில் , பெண்கள் வாழ்வாதார உதவிக்கு தையல் இயந்திரம் ,நலிவுற்ற 100 குடும்பங்களுக்கு அரிசி ,மளிகை பொருட்கள்மற்றும் கல்வி உதவி தொகை 3 மாணவ மாணவிகளுக்கு தலா 10000 போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊர் தலைவர் ந. சுந்தர்ராஜன் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு க.சார்மிளா மகளிர்அணி மாவட்ட இணைச் செயலர் மாரியசெல்வி பகுதி மகளிர் அணி செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவிகளை முன்னாள் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் நெல்லை மாவட்டத் தலைவர் தோழர் கண்மணிமாவீரன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆரோக்கியசாமி செல்வகுமார் ஆல்வின் சுரேஷ்பாண்டியன் செல்வம் கண்மணிலலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்