• Thu. Jan 23rd, 2025

மதுரை மாநகரப் பேருந்து நிலையங்களில் பேக் திருடும் குற்றவாளி கைது…

Byadmin

Aug 2, 2021

சுமார் ரூபாய் 6 இலட்சம் – மதிப்புள்ள 16பவுன் தங்கநகைகள், லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல்.
மதுரை மாநகரப் பேருந்துநிலையங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் பேக்குகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டறியமதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா IPS அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் முனைவர். திரு.இராஜசேகரன் IPS (குற்றம்) அவர்களின் நேரடி பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் பயணிகளிடம் பேக்குகளை திருடும் பழங்குற்றவாளியான பாலசுப்பிரமணி(எ)சுப்பிரமணி(எ)சுப்புக்காளை என்பவரை பிடித்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அவர் மதுரை மாநகர் பேருந்து நிலையங்களில் பயணிகளிடமிருந்து பேக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவரிடம் இருந்து 5 வழக்குகளில் தொடர்புடைய சுமார் ரூ.6 இலட்சம் மதிப்புள்ள 16 பவுன் தங்க
நகைகள், 04-லேப்டாப் கணிப்பொறிகள் மற்றும் 05-செல்போன்கள் கைபற்றப்பட்டது.
குற்றவாளி பாலசுப்பிரமணி (எ) சுப்பிரமணி (எ) சுப்புக்காளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்ற வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளியை கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை மதுரை மாநகரக் காவல் ஆணையர் அவர்களும் காவல் துணை ஆணையர் (குற்றம்) அவர்களும் வெகுவாக பாரட்டினார்கள்.