மதுரை C& D மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக தடுப்பூசி முகாம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் தொடக்க பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் 1000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த C&D மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சரவணன் கூறுகையில் எங்கள் சங்கத்தின் நோக்கம் தொற்று இல்லா மதுரையை உருவாக்குவது 100% தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மதுரையை உருவாக்குவது எங்கள இலக்கு இது வரை பொதுமக்கள் சுமார் 15 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் 17வது இலவச தடுப்பூசி முகாமை நடத்துக்கிறோம் இன்று மட்டும் ஆயிரம் நபர்களுக்கு covid shield தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தார் எம்எஸ் சரவணன் செயலாளர் அவர்கள் தலைமை தாங்கினார் மணியம்மை மழலையர் தொடக்க பள்ளியின் தாளாளர் வரதராஜன் அவர்கள் முன்னிலை வகுத்தார் C&D மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி கணேசன் மற்றும் மருந்து வணிகப் பிரிவின் தலைவர் சதீஷ்குமார் பொருளாளர் செண்பகராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…