சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற டாட்டா இன்டிகா கார் கோவிந்தன்பட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியை இடித்து தூக்கிச் சென்று அப்பகுதியில் இருந்த கட்டிட வாசலில் மோதி நின்றது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தேசிய நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், மூதாட்டி காரில் இழுத்துச் செல்லப்பட்டு சர்ச் வாசலில் கிடந்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டனர்.
இது தொடர்பாக பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.