

பனைத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது
கூட்டத்திற்கு பனைத் தொழிலாளர் நலச் சங்க தலைவர் சதாசிவம். செயலாளர் செல்வராஜ்,
பொருளாளர் ஹெலன் செல்வராஜ் ஆகியோர்கள் கலந் து கொண்டனர்
கூட்டத்தில் தமிழக அரசு ப னன தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் அந்த வாரியத்திற்கு பனைத்தொழில் சார்பாக ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்
மீனவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் நலத்திட்டங்களும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்
பனைத் தொழிலாளர் குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்
பனைத் தொழிலாளர்களுக்கு வங்கிகளின் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும்
பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை காவல்துறை நிறுத்தவேண்டும் பனை மரங்கள் மூலம் உற்பத்தி செய்யும் பொருள்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்
பனை மரங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் கூட்டத்தில் பனைத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.