பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய நாமக்கல் அரசு பள்ளி மாணவிகளுக்கு கிராம மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தேசிய அளவில் youth asian federation of India சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழகம்,ஆந்திரா,கேரளா,தெலுங்கானா,கோவா,டெல்லி,ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து கபடி வீரர்கள் பங்கேற்று விளையாடினர். 17வயது,19வயது மற்றும் 19வயதிற்கு மேல் ஆகிய மூன்று பிரிவின்கீழ் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த அரசுபள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இதன் மூலம் இறுதி போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அளவில் முதல் பரிசுடன் ஊர் திரும்பியுள்ளனர் மாணவிகள் இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் அசாம் மாநிலத்தில் நடைபெறும் சர்வேதேச போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் சார்பில் 12மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில் கபடி போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களுடன் சொந்த ஊர் திரும்பிய கபடி வீராங்கனைகளுக்கு கிராம மக்கள் மலர் தூவியும்,சால்வை அணிவித்தும் கெளரபடுத்தினர்.
இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஜெயவேலுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததை தொடர்ந்து இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர்.சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ள கபடி வீராங்கனைகளுக்கு தமிழக அரசின் விளையாட்டு துறையின் சார்பில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கபடி வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.