


தொழிலாளர்களின் கூலித்தொகை 6 லட்சம் ஏப்பமிட்டு மயங்கிக்கிடக்கும் விருதுநகர் டாஸ்மாக் நிர்வாகம் நமது அரசியல் டுடே நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. விருதுநகர் மாவட்ட சுமைப்பணியாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் கே. பிச்சைக்கனி தான் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். விருதுநகர் மாவட்டத்தில் 6000 சுமைப்பணி தொழிலாளர்களும் விருதுநகரில் மட்டும் 3 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். டாஸ்மாக் மதுபானக்கிடங்களில் மட்டும் 50 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.இந்தடாஸ்மாக் தொழிலாளர்களுக்கு டிரான்ஸ்போர்ட் ஒப்பந்ததாரர் கூலிப்பணமாக ரூ.6 லட்சம் வரை கூலிப்பணம் வழங்கவில்லை. இதனால் இந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை சுமைப்பணித் தொழிலாளர்களின் பசிப்பிணியை போக்கிட டாஸ்மாக் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா? என்பதே பிச்சைக்கனி கடித சாரம். இந்த மனு தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு 6 லட்சம் கூலியை பெற்றுத் தர அரசியல் டுடே நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தளம் செய்தி தளம் மட்டுமல்ல தீர்வின் வடிகாலும் கூட.
விருதுநகர் மாவட்டம் மதுபான கிடங்கின் மேலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.


