சிவகங்கை மாவட்டத்தில் சில கிராமங்களிலோ, நகரங்களிலே தொற்று ஏற்பட்டால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். பொதுமக்கள் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்., காரைக்குடியில் நடைபெற்ற கொரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் பேச்சு.
நாடு முழுவதும் கொரானா தொற்று இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில்,மூன்றாம் கட்ட தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மருத்துவத்துறையின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தியிருக்கும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்,சுகாதார துறையின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்றும், கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசிய போது, நமது மாவட்டத்தில் சில கிராமங்களிலோ, நகரங்களிலே தொற்று ஏற்பட்டால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். பொதுமக்கள் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், கோயில்களில் பூஜைகள் வழக்கம் போல் நடக்கும் என்றும், பொதுமக்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்’.