

திண்டுக்கல் கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி பவுன்தாய். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது இவர்கள் திண்டுக்கல் கோபால் நகரிலுள்ள வினோத் கண்ணன் என்பவரது சொந்தமான வீட்டில் மூன்று ஆண்டுகள் ஒத்திக்கு வீடு பிடித்து குடியேறினர். இதற்காக ரூ 3 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒப்பந்த காலம் முடிய ஓராண்டுக்கு முன்பாகவே இவர்களை வினோத் கண்ணன் தனது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் முருகன் தான் கொடுத்த ஒத்தி பணம் ரூபாய் மூன்று லட்சத்தை திருப்பிக் கொடுங்கள் காலி செய்கின்றோம் என கூறியுள்ளார். மேலும் வினோத் கண்ணன் பணம் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முருகன் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் இரண்டு முறை விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.. ஆனால் பணம் கொடுத்ததை திருப்பி தர முடியாது என வினோத் கண்ணன் கூறியதால் மனமுடைந்த முருகன் தனது மனைவி பவுன்தாயுடன் இன்று 27.07.21 இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

