முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. அத்துடன் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் காகிதமில்லா பட்ஜெட்டும் இதுவே. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21ம் தேதி வரை நடத்தப்படுகிறது. காலை 10 மணி அளவில் சட்டப்பேரவைக்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
தமிழ் வளர்ச்சி:
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80.26 கோடி நிதி ஒதுக்கீடு.
தொல்லியல் ஆய்வுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு 405.13 கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்கு 8930.29 கோடி ஒதுக்கீடு.
தமிழக காவல்துறைக்கு 8,930 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
காவல் துறையில் 14317 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை.
காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை.
சாலைப் பாதுகாப்புக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
கோவிட் பெருந்தொற்று காலத்தில் வாகன போக்குவரத்து கணிசமான அளவு குறைந்தாலும் 45,489 விபத்துகள், 8060 உயிரிழப்புகள்.
ரூ 9,370.11 கோடி ரூபாய் செலவில் கோவிட் நிவாரண தொகுப்புகள் வழங்கப்பட்டன.
2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன : பபட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பொதுநிலங்கள் மேலாண்மைக்கு தனியாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
அரசு நில மேலாண்மை அமைக்கப்படும் – பட்ஜெட்டில் அறிவிப்பு
செம்மொழித் தமிழ் விருது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி வழங்கப்படும். விருதுத்தொகை 10 லட்சம் வழங்கப்படும் : நிதியமைச்சர்
தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் : நிதியமைச்சர்
தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடி, கொற்கை உள்ளிட்ட தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும்.
கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்