மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைக்கெதிராகவும், வேலை நிறுத்த உரிமை பறிப்பு சட்டத்திற்கு எதிராகவும், பொதுதுறை எல்.ஐ.சி, வங்கி தனியார் மயத்திற்கு எதிராகவும். இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியன்று பிற்பகல் பெரியார் சிலை அருகில் உள்ள எல்.ஐ.சி. யூனிட் 2 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு .தங்கவேல், தலைமை வகித்தார். மதுரை கோட்ட துணைத்தலைவர் வாஞ்சிநாதன் கருத்துரையாற்றினார். ஜான்சன் நன்றியுரையாற்றினார். இப்போராட்டத்தில் முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.