• Fri. Mar 29th, 2024

செப்டம்பர் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்!…

By

Aug 10, 2021

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது.

அதை தொடர்ந்து 14ஆம் தேதி வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. எப்போதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


ஆனால் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அலுவல் ஆய்வு கூட்டமானது சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை. மற்ற கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரை செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதாவது மொத்தம் 50 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக என்னென்ன மக்கள் நல திட்டங்களை அறிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருந்தாலும், தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருந்து வரும் நிலையில் அதை திமுக எப்படி சமாளிக்கப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. துறை ரீதியாக மானியகோரிக்கை விவாதமும் கூட்டத்தொடரில் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *