• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

சுதந்திர தினத்தில் முன்களப்பணியாளர்கள் கெளரவிப்பு!…

By

Aug 15, 2021

மதுரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த சுதந்திர தின விழாவில் 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தேசியகொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு 35 காவலர்களுக்கு தமிழக அரசின் பதக்கங்களை வழங்கினார்.

இதேபோல் கொரோனா தடுப்பு காலங்களில் சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறை, காவல் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் 215 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.

தொடர்ந்து 56 லட்சத்து 60ஆயிரம் மதிப்பிலான சமூக பாதுகாப்பு திட்டம், ஓய்வூதியம், வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன், மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.