கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் செலுத்த மிக இலகுவான சிறந்த வலை தளத்தை உருவாக்க மாநகராட்சி அழைப்பு. 2 லட்சம் வரை பரிசு தரவும் முடிவு. கோவை. ஜூலை. 20- கோவையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் இரவு பகலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பாக டோக்கன் வழங்கப்பட்டு காலை 8 மணிக்கு மையங்கள் அறிவிக்கப்பட்டு, 10 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 11 மணிக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தடுப்பதற்காக புதிய இலகுவான வலைதளம் உருவாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மாநகராட்சி சார்பாக தடுப்பூசி தொடர்பான அனைத்து தகவல்கள் பெறுவதற்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள எளிய முறையில் முன் பதிவு செய்வதற்கும் தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் தரவுகளை சேகரிக்க என அனைத்து தரவுகளும் பணிகளும் நடைபெற சிறந்த வலைதளத்தை உருவாக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி வாழ்ந்தவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி தகவல்களை பெறலாம் மேலும் சிறந்த வலைதளத்தை உருவாக்குபவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் வரை பரிசுத் தொகையும் அளிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.