• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முகாம்!…

By

Aug 10, 2021

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட 7 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கும் முகாம் நடைபெற்றது.

விருதுநகர் உட்கோட்டம் மேற்கு, கிழக்கு, புறநகர், பஜார், சூலக்கரை, வச்சகாரபட்டி , ஆமத்தூர் ஆகிய ஏழு காவல் நிலையங்களில் கடந்த ஐந்து வருடங்களில் பதிவான காணாமல் போனவர்கள் 28 பேரில் ஆண் 13 ;பெண் 15 ஆகியவர்கள் பற்றிய மேளா அல்லம்பட்டி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதுரை சரக காவல் துணைத்தலைவர் காமினி உத்தரவின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மேற்பார்வையில் இந்த மேளாவை தொடங்கி வைத்தார். துணை காவல் கண்காணிப்பாளர் அருணாசலம் தலைமையில் 6 காவல் ஆய்வாளர்கள், 5 சார்பு ஆய்வாளர்கள், 20 காவலர்கள் இந்த மேளாவில் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற மேளாவில் மூன்று நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.