• Wed. Feb 19th, 2025

கலாமின் நினைவு நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு…..

Byadmin

Jul 28, 2021

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆறாம்ஆணடு நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அப்துல் கலாம் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தேவகி ஸ்கேன் மருத்துவமனையில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அவரது பசுமை நினைவை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது இதில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நாகேந்திரன் மற்றும் பசுமை இயக்கம் சார்பாக ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் எம் எஸ் சி போஸ் அவர்கள் பாஸ்கரன் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் பசுமை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பிரகாஷ் அகில் சத்தியா ரூப்க்குமார் பசுமை இயக்கத் தலைவர் சிவகுமார் தலைமையில் சுற்றுலா வழிகாட்டி டான்சிங் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கும் பசுமை விரும்பி மக்களுக்கும் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர் இந்தியா ஒரு பசுமை நாடாக மாற வேண்டும் என்ற அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம் என்று மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நாகேந்திரன் அவர்கள் குறிப்பிட்டார் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர்..