பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1400 கோடியை வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை 50 நாட்களில் நிறைவேற்றத் தவறினால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.