


கோவை மாவட்டத்தில் மர்மநபர்கள் வயதான நபர்களை குறிவைத்து வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்கள் தேவைப்படுகிறது எனக்கூறி அவர்களது ஒடிபி பின் நம்பர் மற்றும் எண்களை லாவகமாக ஏமாற்றி வாங்கிய பின்பு வயதானவர்களின் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து வருகின்றனர்.
மேலும் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் படிப்பறிவு இன்றி இருக்கும் நபர்களையும் குறிவைத்து இதேபோன்று சோதனை முறையில் அவர்களுடைய தகவல்களை பெற்று அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி வருகின்றனர்.

இதனை தடுக்க கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சைபர் க்ரைம் போலீசார் கார்ட்டூன் மூலம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்அந்த வீடியோவில் உங்களுடைய OTP எண்களை அடித்து கேட்டாலும் கொடுக்காதீங்க. மேலாளர் என பொய் சொல்லி கேட்டாலும் OTP எண்களை கொடுக்காதீங்க. காதில் வாங்காமல் வந்தீங்கன்னா ரொம்ப சவுரியம் என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

