• Tue. Jun 24th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

இந்திய அரசின் தபால் துறையின் கொடுமையான நடவடிக்கையை கண்டித்து – போராட்டம்.

Byadmin

Aug 5, 2021

இந்திய அரசின் தபால் துறையின் கொடுமையான நடவடிக்கையை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இரத்தினசுவாமியின் ஒரு வித்தியாசமான போராட்டம்.தபால்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது.இந்திய தபால் துறை நடவடிக்கை எடுக்குமா அல்லது வேடிக்கை பார்க்குமா.விடைதெரியாத கேள்விகளுடன் பரிதவிக்கும் தந்தையும் மகளும்.

 தமிழகத்தில் அதிக எழுத்தறிவு பெற்ற குமரி மாவட்டத்தில் முதுகலை பட்டம் பெற்ற கெளதமி க்கு நடந்துள்ள கொடுமையான நடவடிக்கையை கண்டித்து.கெளதமியின் தந்தை . சுவாமி தோப்பு அய்யா வழி தலைமை பதியின் பூஜிதகுரு பாலபிரஜாதிபதியை வணங்கி.கோரிக்கை மனுவை தலையில் சுமந்து வண்ணம்.சுவாமிதோப்பில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம்.

   குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்த.பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றியவர்.தற்போது பணி ஓய்வு பெற்றவர்.இவரது மகள் கெளதமி.இவர் நாகர்கோவில் தபால் துறையின் சப்டிவிஷன் நெய்யூர் தபால் அலுவலகத்தில் போஸ்டல் உதவியாளராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

 பணிக்காலத்தில் முதல் குழந்தை பேருக்கு பின்.குழந்தையை பராமரிக்க விடுமுறை கேட்டதற்கு துறை சார் அதிகாரிகள் மறுத்த நிலையில்.துறையின்  உயர் அதிகாரிகளிடம் முறையாக கோரிக்கை வைத்து விடுமுறை பெற்றுள்ளார்.இந்த கால கட்டத்தில் கெளதமி இரண்டாவது குழந்தையை கருவுற்ற நிலையில்.முதல்குழந்தை பேருகால விடுப்பை ரத்து செய்ததுடன்.விடுப்பு கால ஊதியத்தையும் ரத்து செய்து.சம்பள பணத்தை திரும்ப கட்டுமாறு துறை சார்ந்த தகவல் வந்துள்ள நிலையில்.மன உளச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில்.வயிற்றில் கட்டி ஏற்பட்டு அதனை போக்க அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவ விடுமுறை கேட்டபோது.அதிகாரி மறுத்துள்ளார்.தொடர்து குறிப்பிட்ட அதிகாரி கொடுத்த தொடர் மன உளசச்சலால்.கெளதமி வேலையை ராஜினாமா செய்த நிலையில்.சம்பந்தபட்டதுறை சார்பில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக இவருக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்ட நிலையில்.மனம் உடைந்த கெளதமி தற்கொலை செய்து விடுவாளோ என்ற அச்சத்தால்.இவரது தந்தை ஓய்வுபெற்ற பொறியியல் துறை அதிகாரி.பணி நீக்க உத்தரவை தபால் துறை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை தலையில் சுமந்து.சுவாமி தோப்பு_ நாகர்கோவில் இடையேயான 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்.

மகள் கெளதமி யின் பணி நீக்கம் உத்தரவை இந்திய தபால்துறை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் நேரில் கொடுப்பதுடன்.அதன் நலகலை நாகர்கோவில் சட்டமன்ற பாஜகவை சேர்ந்த உறுப்பினர் எம்.ஆர்.காந்தி,பாரதபிரதமர் நரேந்திர மோடி கற்கும் தபாலில் அனுப்பியும் உள்ளாராம்.