• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆடி மாதபசு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியை தீவிர படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Byadmin

Jul 22, 2021

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடி மாத பசு விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களின் அனுமதியின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. வரும் 23.07.2021 அன்று சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் ஆடி மாத பசு விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தீவிர படுத்தியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதனால் பொதுமக்களின் வசதிக்காக பூஜை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி வாயிலாக நேரலையாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோயிலுக்கு வருகை தருவதை தவிர்த்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது