• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

குட்டையை தூர்வாரிய போது பழங்கால பைரவர் கற்சிலை கண்டெப்பு….

Byadmin

Jul 27, 2021

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த துக்காச்சி ஊராட்சி, குமாரமங்கலம் வட்டம், ஏரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இன்று காலை அவரது வயலின் அருகில் உள்ள சிறிய குட்டையிலுள்ள மண்ணை எடுத்து, கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஜேசிபி எந்திரம் மூலம் குட்டையில் மண்ணை தோண்டிய போது‌ சுமார் 4 அடி உயரமுள்ள கலைநயமிக்க பழங்கால பைரவர் கற்சிலை கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் பைரவர் காய்ச்சலுக்கு மஞ்சள் மற்றும் பால் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து பூஜை செய்தனர். பின்னர் கிராமமக்கள் கண்டெடுக்கப்பட்ட பைரவர் கற்சிலையை கும்பகோணம் தாலுக்கா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து, தாசில்தார் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.
இந்த கற்சிலை தஞ்சை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆய்வுக்கு பின்னர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.